Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பாதிப்பு அதிகம்…. ஆபத்து பட்டியலில் சேர்க்கும் ஜெர்மனி…. இந்திய பயணிகளுக்கு தடை….!!!

இந்தியாவில் குறைவான பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஜெர்மனிக்கு வருவதை ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் கொரோனாவின் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்  பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 வது நாளாக 3 லட்சத்திற்கும் மேலானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,264 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனை  கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையிலும் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

ஆகையால் இந்தியாவுடனான போக்குவரத்தில் சில மாற்றங்களை ஜெர்மனி அரசு எடுத்துள்ளது.இந்நிலையில் நாங்கள் அறிவித்த  தடுப்பூசி பிரச்சாரம் போலி ஆகிவிடக்கூடாது என்று இந்தியாவுடனான போக்குவரத்து குறித்த சில முடிவுகளை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது. அந்தவகையில் இந்தியாவைச் சேர்ந்த ஜெர்மனிவாசிகள் மட்டுமே நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இந்த நடைமுறை நேற்று அமுல்படுத்தயிருப்பதாகவும் சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவை அதிக பாதிப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் சேர்க்க இருப்பதாக ஜெர்மனி முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளது.

Categories

Tech |