முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாடல் வெளியான 24 மணிநேரத்தில் சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘லாபம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் இப்படத்தின் யாழா யாழா என்ற முதல் சிங்கிள் பாடலும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இதேபோல் இப்படத்தின் மற்றொரு பாடலான ‘யாமிலி யாமிலியா’ என்ற பாடலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆகையால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.