நடிகர் சிபிராஜ் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரின் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் சிலர் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று பெண்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப வயசு வித்தியாசம் உடைய விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதனை கண்ட சிபிராஜ் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்குரிய நண்பர்களே. இந்த படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு போலியான செய்தி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த ஊழலுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம்” என்று பதிவு செய்துள்ளார்.
Dear friends. It has come to my notice that this picture has been doing the rounds on social media last few days.I wish to clarify that this is a FAKE casting call and I’m totally unaware and in no way connected to this scam.Pls do not fall Prey to this 🙏🏻 pic.twitter.com/FQqfyEWebI
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 23, 2021