இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால், ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும், அதேநேரம் சூழல் நல்லபடியாக மாறினால் நான் அணிக்குள் மீண்டும் வருவேன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பை டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.