பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் பாரதி (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார்.
இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் தலைமறைவான அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.