நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை சினேகா என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார் . இவர் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினேகா-பிரசன்னா இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சினேகாவின் நியூ லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. புது ஹேர் ஸ்டைலுடன் மாடர்ன் உடையில் சினேகா இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .