Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் திமுக கோட்டை”8141 வாக்கு வித்தியாசத்தில்” கதிர் ஆனந்த் வெற்றி …!!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

Image result for dmk katchi anand

இருவருக்கும் இடையே 17,000 வாக்கு வரை வித்தியாசம் இருந்தாலும் நிமிடத்துக்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் மாறிக்கொண்டே வந்தது. யார் வெற்றி பெற போவார்கள் என்ற பரபரப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

முழுமையாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் , அதிமுகவின் AC சண்முகம் 4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் தீபலெக்ஷ்மி 26,995 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  இதன் மூலம் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.இந்த வெற்றியை திமுக_வினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

Categories

Tech |