சார்தாம் யாத்திரை செல்ல உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடியதால் கொரோனா பரவல் அதிக உச்சத்தை அடைந்தது. இதற்கு ஹரித்துவாரில் ஓடும் கங்கை மாதா தெய்வம் நம்மை காப்பாற்றும் கொரோனா பாதிப்பு வராது என உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத் கூறியிருந்த நிலையில் தற்போது பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.