Categories
லைப் ஸ்டைல்

உஷார்…. தயிருடன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…. அது ரொம்ப ஆபத்து….!!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.  ஆனால் சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி தயிர் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று.

அது எளிதில் செரிமானம் அடைய கூடிய உணவுப் பொருள். இருந்தாலும் அதனை குறிப்பிட்ட பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அது உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் வெங்காயம் நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்க வல்லது. தயிர் வெங்காயம் போன்ற தயிரும் வெங்காயம் கலந்த கலவையை நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பட்சத்தில், அது தோல் அலர்ஜியை ஏற்படுத்த வல்ல உடல் அரிப்பு, எக்ஸிமா, சொரியாசிஸ் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும். மாம்பழம் நமது உடலின் வெப்பத்தை அதிகரிக்க வல்லது. தயிருடன் மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வு கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்படும். தயிருடன் உளுத்தம் பருப்பில் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால், அது செரிமானத்தில் பிரச்சனையை உருவாக்கி இறுதியில் வயிற்று உப்புசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும். என்னை மிக்க உணவுகளுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும்போது அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வடைய செய்து விடுகிறது.

Categories

Tech |