Categories
தேசிய செய்திகள்

டமார் என திறந்த கதவு…! ரோட்டிலே விழுந்த சடலம்…. பதறி ஓடிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ …!!

இந்தியாவில் சடலங்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆம்புலன்சிலிருந்து திடீரென சடலம் ஒன்று கீழே விழுந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் இல்லாமல், தேவையான ஆக்சிஜனும் இல்லாமல் இந்தியா மோசமான நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விடிசா என்ற பகுதியில் கொரோனாவால் பலரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கொரோனாவால் இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் கொடுக்க முடியாததால் சடலங்களை எரிப்பதற்காக மருத்துவ நிர்வாகமே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முனைகிறது. அந்த வகையில் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனையில் இருந்த சடலங்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்சில் இருந்த பக்கவாட்டு கதவுகள் திடீரென திறந்ததால் ஆம்புலன்சில் இருந்த சடலம் ஒன்று நடு ரோட்டில் விழுந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். அதன்பிறகு ஆம்புலன்சில் இருந்து இறங்கி வந்த டிரைவர் நடுரோட்டில் விழுந்து கிடந்த அந்த சடலத்தை எடுத்து மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.

Categories

Tech |