Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

500 ஆம்புலன்ஸ்கள் நிக்குது…! ஏன் பட்டுப்படாமல் பேசுறீங்க ? தமிழகத்தில் அதிர்ச்சி …!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பழுதடைந்ததாக்க கூறி 500க்கும் மேற்பட்ட பழைய, புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளன.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பழுதடைந்ததாக்கக்கூறி 500க்கும் மேற்பட்ட பழைய மற்றும் புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மாதங்களாக தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தப்படாத புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளுடன் கேட்ட போது பட்டும் படாமல் பதில் அளிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் ஓரம்கட்டப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனகள் பயன்படுமா என சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Categories

Tech |