நாளை தூய்மை பணியாளர்களுக்காக தமிழகத்தில் 100 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை ஊரடங்கு போது தூய்மைப் பணியாளர்கள் வந்து செல்வதற்காக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட வழித்தடங்களில் 100 பேருந்துகள் இயக்கப்படும். உரிய அடையாள அட்டையுடன் முக கவசம் அணிந்து பயணிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.