கொரோனாவால் எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியாவில் அதன் இரண்டாவது அலை மூலம் அறிய முடிவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் திரு டெட்ரோஸ் அதானம் தெரிவித்தார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப் படாததால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழப்பதாக குறிப்பிட்டார். கொரோனாவில் இரண்டாவது அலையால் இந்தியாவில் அதிகரித்துவரும் பாதிப்பு நிலவரம் கவலை அடைய செய்வதாகவும், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் டெட்ரோஸ் அதானம் தெரிவித்தார். கொரோனா வைரஸால் எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியாவில் பரவும் இரண்டாவது அலை மூலம் உணர முடியும் என்பதை அவர் குறிப்பிட்டார்.