Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடாமல் வந்தது தப்பு…. நம்ம நல்லதுக்குதான சொல்லுறாங்க…. கைது செய்த காவல்துறை….!!

பொது இடத்தில் போலீசாரிடம் ரகளை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் முன்புறம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஒரு பெண் முகக்கவசம் அணியாமல் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி முக கவசம் அணியாமல் இருந்ததால் அபராதம் ரூபாய் 200 செலுத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது அந்த பெண் போலீசாரை பார்த்து “எல்லோரும் உழைச்சுதான் சாப்பிடுகிறோம்.

இந்த அளவு சிறிய முகக்கவசத்திற்கு ரூபாய் 200 கட்ட சொல்றீங்களே அசிங்கமா இல்லையா என கேட்டுள்ளார். உடனடியாக காவல்துறை இதை கலெக்டரிடம் தான் கேட்கவேண்டும் என்று சொல்ல அந்த பெண் கலெக்டரை கூட்டிட்டு வா.. என்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இந்த சம்பவத்தை போனில் வீடியோ எடுத்த காவலரை பார்த்து அந்தப் பெண் வீடியோ எடுக்குறியா? எடுத்துக்கோ.. ஃபேஸ்புக்ல போடு ஷேர் செய்வோமா? எனக்கு மூச்சு திணறல் ஏற்படுவதால் நான் மாஸ்க்கை அணியாமல் கையில் வைத்திருக்கிறேன்.

என்னை உள்ளே போட போறியா? நானும் ரவுடி தான் என கூறிவிட்டு அங்கிருந்து அந்தப் பெண் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அந்த பெண் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மனோஜிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பொது இடத்தில் ஆபாசமாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |