இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பலர் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நாட்களில் கொரோனாவின் அச்சுறுத்தல் மிக மோசமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆகையால் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் மக்களும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனை மக்களை அச்சுறுத்துவதற்காக கூறவில்லை என்றும் இது தான் நாட்டின் நிதர்சனமான சூழ்நிலை என்றும் தெரிவித்தார். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.