Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்க இருந்துதான் காணாம போயிட்டா… சிறுமியை தேடும் தந்தை… நிறுவன இயக்குனரின் புகார்…!!

தனியார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். இதில் சௌந்தர்யா குளித்தலையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தின் காப்பகத்தில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சௌந்தர்யா வெகு நேரமாகியும் காப்பகத்திற்கு திரும்ப வரவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி காணாமல்போன சிறுமியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |