இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்துள்ள காட்சிகளை எப்படி சரி செய்வது என படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக்.சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் இவர் நடித்திருந்த சில படங்களின் தயாரிப்பாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த படங்களில் சில காட்சிகளில் விவேக் நடித்துள்ளார்.
எஞ்சியுள்ள காட்சிகளில் நடிப்பதற்குள் விவேக்கின் மறைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோல் தான் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன்2 படத்திலும் விவேக் நடித்திருந்தார். ஆனால் விவேக்கின் நடிப்பில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் என்ன செய்யலாம் என்று இயக்குனர் ஷங்கர் யோசித்து வருகிறார்.
அதன்படி, இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்று அவர் கதாபாத்திரத்தை முடித்து விடலாமா? அல்லது வேறொரு நபரை வைத்து விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா? என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.