Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சொல்றத செய்ய மாட்டீங்களா…? கடைகளில் அலைமோதிய கூட்டம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா விதிகளை பின்பற்றதால் காஞ்சிபுரத்தில் உள்ள 11 கடைகளுக்கு  அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பட்டு புடவை வாங்குவதற்காக தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் காந்தி சாலை என்ற பகுதியில் உணவு, ஜவுளி கடைகளில் அரசு அறிவித்த படி முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் கூடியுள்ளன‌‌ர்.

இதனை அடுத்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்தி சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளரிடம் முக கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது குறித்து என்ற கேள்வி எழுப்பியதோடு, தலா 5000 ரூபாய் வீதம் அதிகாரிகள் 11 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |