டிரைவர் 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் முதல் இரண்டு மனைவிகளும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மனோஜ் என்று டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மௌனிகா என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் ஆயிஷா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும் மனோஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் வசிக்கும் ஒரு பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு மனோஜ் அவரது தாயார் வீட்டில் குடும்பம் நடத்துவதாக உமா மகேஸ்வரி மற்றும் ஆயிஷாவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த அவர்கள் மனோஜின் தாயாரான ராணியின் வீட்டிற்கு சென்று தங்களது கணவர் குறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த இரண்டு மனைவிகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் மயங்கிய நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.