Categories
உலக செய்திகள்

நதியில் குதித்த சிறுவன்…. சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண்…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் சிறுவன் ஒருவன் குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் தேம்ஸ் நதியில் Tower Bridge ஏறி சிறுவன்(13) ஒருவன் குதித்துள்ளான். குதிக்கும்போது அலறிய சிறுவனின் குரல் பாலத்தில் நடந்து சென்ற பெண் காதில் விழ சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் பாலத்திலிருந்து அவரும் குதித்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணால் சிறுவனை கண்டுபிடிக்க இயலவில்லை. சிறுவனின் பையை மட்டும் மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சிறுவன் குறித்த எந்த தகவலும் இல்லாததால் மாயமானவர்கள் வழக்கு பட்டியலில் சேர்த்து விசாரிக்கப்படுவதாக  காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |