ஸ்பெயின் நாட்டில் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி நரமாமிசம் சாப்பிட்டு வந்த மகனின் வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்த ஆல்பர்டோ சஞ்சஸ் கோமேஸ் (28) என்னும் இளைஞன், தனது தாய் மரியா சொலேடைட் கோமேஸ்-ஐ கொடூரமாக கொலை செய்து அவருடைய உடலை நரமாமிசம் சாப்பிட்டு வந்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மரியாவின் தோழி கொடுத்த புகாரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
மேலும் அந்த இளைஞன் வீட்டில் மரியாவின் உடலை 1000 துண்டுகளாக வெட்டி டப்பாக்களில் அடைத்து தான் உண்டதோடு, தனது வளர்ப்பு நாய்க்கும் கொடுத்து வந்ததுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞன் மீதான வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த நிலையில், சென்ற புதன்கிழமை அன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த இளைஞர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட போது, அவர் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வாலிபர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது, தனது தாயை கொலை செய்யுமாறு காதில் பல குரல்கள் கேட்டதாகவும், ஆனால் தாயை கொலை செய்ததும், அவரை 1000 துண்டுகளாக வெட்டி அதனை சாப்பிட்டு வந்ததும் நினைவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இளைஞன் ஆல்பர்டோவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் இந்த பரிசோதனைக்காக முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.