நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் மதுபான கடைகளை முழுமையாக மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், கள், சாராயக் கடைகள், மது பார்கள், மதுபான உணவகங்களை திறக்க கூடாது. திங்கள் முதல் அனைத்து மதுபான தொடர்பான கடைகளும் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.