சீனாவில் கொரோனா தடுப்பூசி அதிகமாக இருக்கின்றது, அங்கே கொரோனா இரண்டாம் அலை இல்லை என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மக்களிடையே எழுகின்ற கோபத்தின் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. எங்கே இருக்கு தடுப்பூசி. உங்களுடைய தடுப்பூசியின் உடைய உற்பத்தி எவ்வளவு ? வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா மோடி? நீங்கள் உங்களுடைய இரண்டு நிறுவனத்திலும் எவ்வளவு தடுப்பூசி தயார் செய்கிறீர்கள் ? இந்த நாட்டு மக்களுக்கு அது போதுமானதா ? நீங்கள் எப்படி 18 வயது இருப்பவருக்கு தடுப்பூசி போட முடியும்.
நான் பத்து நாள் முன்பு ஒரு செய்தி படித்தேன்…. உத்தரப்பிரதேஷத்தில் ஒரு கிராமத்தில் சென்று பிரைமரி ஹெல்த் சென்டரில் அந்த ஊர் பொதுமக்கள் தடுப்பு வந்து இருக்கிறது, எனக்கு போடவில்லை என்று அவர்கள் வம்பு செய்து இருக்கிறார். அந்த டாக்டர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் நம்பவில்லை. அவர்களுடைய தொந்தரவு தாங்க முடியாமல் நாய்க்கடிக்கு போடக்கூடிய தடுப்பூசி அவர்களுக்கு போட்டுவிட்டார்கள்.
ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் இதுதான் இன்றைய நிலை. இன்றைக்கு ஒரு அரசாங்கம் எப்படி மெத்தனமாக இருந்தது என்று தெரியவில்லை. இன்றைக்கு சைனா அவ்வளவு பெரிய நாடு, நம்மை விட பெரிய நாடு, அவர்கள் தடுப்பூசியில் முழுமை அடைந்து இருக்கிறார்கள். சைனாவில் தடுப்பு ஊசி அதிகமாக ஆக இருக்கிறது, இரண்டாவது அலை அங்கு இல்லை.
வெளிநாடுகளுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்கிறார்கள். நீங்கள் சைனா ஏற்றுமதி செய்கிறான் ? என்று நீங்கள் செய்தால் இங்கு தேவைக்கு கூட இல்லை. அரசின் மிகப்பெரிய தோல்வி இது. இதை போன்ற ஒரு தோல்வியை சமீப காலங்களில் சமூக நிகழ்வில் ஒரு அரசு கண்டதே இல்லை, மோடி அரசு கண்டு இருக்கிறது. இதற்கான பல விஷயங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசு கையில் வைத்திருப்பது தவறு.
கொரோனாவை சமாளிப்பதற்கு பல்வேறு விதமான வசதிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும். அவர்கள் கோவேக்சின் கண்டுபிடிக்கவேண்டும், தடுப்பும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். இப்படி பல உதவிகளை செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வது இல்லை என கே.எஸ் அழகிரி விமர்சித்தார்.