நேற்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வாக்கு எண்ணிக்கையில் எந்த காரணத்தைக் கொண்டும் மேஜைகள் குறைக்க கூடாது. எப்படி பழைய நிலையில் பின்பற்றப்பட்டதோ அந்த நிலையில்தான் கடைபிடிக்க வேண்டும். எனவே இப்பொழுது தான் தெளிவாக தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது.
கவுண்டிங் ஏஜென்ட் வருபவர்கள் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும், ஊசி போட்டுக் கொள்ள வேண்டும், இப்படி இருக்கும் போது அதில் என்ன அச்சப்படத் தேவை இருக்கிறது. எனவே அச்சப்பட தேவையில்லை. எனவே ஊசி போட்ட சர்டிபிகேட்டும், அதேபோன்று கோவிட் நெகட்டிவ் அந்த சான்றிதழ் இருந்தால்தான் அனுமதி செய்யப்போகிறார்கள்.
அப்படி இருக்கும் பொழுது வாக்கு எண்ணிக்கை மேஜையை கூட்டுவது குறைப்பது என்பது கூடாத ஒரு விஷயம். கடந்த காலத்தில் என்ன விதி முறை பின்பற்றப்பட்டதோ, அந்த விதிமுறைகள் தான் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.