Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் கெயிலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் …! கௌதம் கம்பீர் கருத்து …!!!

இந்த சீசனில் பஞ்சாப் அணி 1 போட்டியில் வென்று ,3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

பஞ்சாப் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும்  ,அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ‘யுனிவர்சல் பாஸாக’ இருக்கும் கிறிஸ் கெயில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இதனால் இவருக்கு பதிலாக ,தாவித் மலான் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. இதைப்பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கூறும்போது, பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேயிங் லெவனில்  ஆடும்போது , கிறிஸ் கெயிலை  தொடக்க வீரராக இறக்க வேண்டும்.

ஆனால் கிறிஸ் கெயிலுடன் ,தாவித் மாலானை  ஒப்பிடுவது சரியாகப்படவில்லை. தாவித் மாலன்  நம்பர் ஒன் வீரராக இருந்தாலும் ,கிறிஸ் கெயில்  அதிகமாக ஐபிஎல் சீசனில் விளையாடி உள்ளார். இதனால் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு ,அவர் மாற்றிக்கொள்வார். கிறிஸ் கெயிலை   தொடக்க வீரராக இறக்கினால் , கண்டிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் , என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

Categories

Tech |