உலகின் 8-வது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் உள்ளதாக நியூசிலாந்தை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளரானா நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
உலகில் வாழும் அனைவருக்கும் 7 கண்டங்கள் மட்டுமே உள்ளதாக அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது எட்டாவது கண்டத்தை விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதாவது தென்மேற்கு கடலில் மூழ்கிய நிலையில் தென்பட்ட புதிய நிலப்பகுதி ஒன்றை 8-வது கண்டமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் விஞ்ஞானிகளால் ஸீலான்டியா என்று அழைக்கப்படும் அந்த 8-வது கண்டத்தில் ஒரு சிறிய பகுதி கடலுக்கு மேலாக நியூசிலாந்துக்கு அருகில் வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த கண்டத்தின் மற்ற 94 சதவீத பகுதி கடலுக்குள் முற்றிலுமாக மூழ்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.