நியூயார்க்கில் பெற்ற தாயே தன் இரு குழந்தைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு Dakota Bentley மற்றும் Dallis Bentley என இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என விசாரித்ததற்கு அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் காவல்துறை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து காவல்துறையினரை கண்டதும் அந்த பெண் பதற்றமடைந்ததால் அவர்களின் சந்தேகம் உறுதியாகியுள்ளது.
மேலும் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் ஆண் குழந்தையான Dakota Bentley தலையில் கத்திக்குத்து காயத்துடன் தொட்டிலுக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாத்திரம் கழுவும் சிங்கிற்கு அடியில் ஒரு போர்வையில் போர்த்தியபடி பெண் குழந்தையான Dallis Bentley மார்பில் குத்தப்பட்ட கத்தியுடன் உயிரிழந்துள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்தக் குழந்தைகளின் தந்தை யார் என்பதும், எதற்காக குழந்தைகளை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.