சீனாவில் அரங்கேறுவது இனப்படுகொலை என்று அறிவித்த பிரிட்டன் நாடாளுமன்றம் அதனை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்த கன்சர்வேட்டிவ் எம்.பி நுஷ்ரத் கானி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை எம்.பிக்கள் ஆதரித்தனர். அனால் எம்பிகளின் ஆதரவுகள் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி பிரிட்டன் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசாங்க அமைச்சர்கள் இனப்படுகொலை என்று அறிவிப்பது தொடர்பான எந்த ஒரு முடிவும் நீதிமன்றங்கள் தான் எடுக்கும் என்று கூறியுள்ளனர்.