Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை மட்டும் காணும்….. எல்லோரும் அசால்ட்டா செய்யுறாங்க….. பேருந்தில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்தவரிடம் நகையை திருடிய பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சும்மன்ஸ் பகுதியில் யுகப் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெஜினா பானு என்ற மனைவி இருக்கிறார். இவர் ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு தனியார் பேருந்தில் 20  பவுன் நகையை பர்சில் வைத்து கொண்டு மேட்டூருக்கு பயணம் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து பர்சை பார்த்த போது நகை வைத்திருந்த பர்சைகாணாததால் அதிர்ச்சியடைந்த ரெஜினா பானு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த போது ரெஜினா பானுவிடம் நகையை திருடியதாக ஜோலார்பேட்டையை சேர்ந்த கோகிலா மற்றும் நந்தினி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |