Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடனின் செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

மருத்துவமனையில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை திருடி சென்ற திருடன் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  இதனை தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் ஹரியான மாநிலத்தில் உள்ள Jind Civil மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 182 குப்பிகளையும், கோவாக்சினின் 440 குப்பிகளையும் திருடன் ஒருவன் திருடி சென்றான். இதனைத் தொடர்ந்து திருட்டுப்போன கொரோனா தடுப்பூசிகள் Jind Civil காவல் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் இருந்த இடத்தில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் இது கொரோனா தடுப்பூசி என்று தெரியாததால் திருடி விட்டேன் எனவும் எழுதப்பட்டிருந்தது இதனிடையே கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவன் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |