உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.
பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதே போல தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனங்களை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.
https://twitter.com/SeithisolaiT/status/1159453577783365632