சேலம் மாவட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நிலை காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி இருந்தார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாலதிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் விடுப்பு எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து மாலதி மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாலதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.