திரிபுராவில் கொரோனா நோயாளிகள் 31 பேர் தப்பியோடிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் அருந்ததிநகர் பகுதியில் உள்ள பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிலையத்தில் இருந்து கொரோனா சிகிச்சை பெற்று வந்த 31 நோயாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் ஷைலேஷ் குமார் யாதவ் கூறுகையில் நோயாளிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர்கள் பின்புறம் இருந்த சுவர் மீது ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் திரிபுரா மாநில ரைஃபிள்ஸின் ஆட்சேர்ப்பு பேரணியில் பங்கேற்க வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர காவல்துறையினர் கூறுகையில் அவர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்ணை கண்டறிந்து சென்றோம் ஆனால் அதற்குள் அவர்கள் திரிபுராவை விட்டு வெளியேறி விட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.