Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படி வரக்கூடாது..! தொற்று பரவும் அபாயம்… டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிருமிநாசினி தெளித்த பின்னரே டாஸ்மாக் கடையில் மது பிரியர்களுக்கு மது வாங்க அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள் மதுக்கடைக்கு கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வரிசையாக கட்டம் வரையப்பட்டது அதில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுக்கடைக்கு வருவோர் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அது தவிர கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து பின்னரே மது வாங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் முககவசம் அணிந்து வந்தவர்களுக்கும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டவர்களுக்கும் மட்டுமே மது வாங்க அனுமதி வழங்கப்பட்டது.

Categories

Tech |