கொரோனா தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஹரியானா மாநிலம் ஜின்த் மாவட்டத்தில் உள்ளது பி.பி.சி மருத்துவமனை. இங்கு பயனர்களுக்கு விநியோகிப்பதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளில் 1710 தடுப்பூசி குப்பிக்களை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். மருந்து கிடங்கின் பூட்டை உடைத்து திறந்தள்ள மர்ம நபர்கள் 1270 கோவிட்ஷில்டு தடுப்பூசிகளையும், 440 கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதே அறையில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த பணத்தை தொட்டும் பார்க்காத தடுப்பூசிகள் கள்வர்கள் தடுப்பூசி மருந்துகளை மட்டுமே அள்ளி சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தடுப்பூசி கொள்ளையர்களை ஹரியானா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷல்ப்பி மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரெம்டிசிவர் உயிர்காக்கும் மருந்துகளின் 137 குப்பிகள் மாயமாகி இருக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தின் புகாரையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள துக்கோ கஞ்ச் நகர காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர் பூபேந்திர சலிவால் என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் .