Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மே 2இல் யார் ஆட்சிக்கு வந்தாலும்…! நாங்கள் போராட ரெடி…. எந்த கவலையும் இல்லை …!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபா ஜெயின், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது சட்டதிட்ட விதியின் படி  விதிமீறல் என பதவி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்திரன், நடப்பு தயாரிப்பு சங்கத்தை உறுப்பினர்களை நீக்குகிறோம் என்று சொல்ல்லுறீங்க. ஆக எல்லோரையும் நீங்கள் கோர்ட்டுக்கு வாங்கள் என்று கூப்பிடுகிறீர்கள்.

அப்பொழுது நீங்கள் சங்கம் நடத்த விரும்புகிறீர்களா ? கோட் மூலமாக நடத்த விரும்புகிறீர்களா ? இதுதான் கேள்வி . அப்படி நீங்கள் இந்த சங்கத்தில் வந்து என்ன பொருளாதாரத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் ? என்ன சாதித்து இருக்கிறீர்கள் ? லோக்கல் பார்ட்டி டாக்ஸ்  எதிர்த்து போராடினார்களோ ? நான் கேள்வி கேட்டேன்,  நீங்கள் கேள்வி கேட்டீர்களா ?  திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை தான் உள்ளே விடணும் நான் கேள்வி கேட்டேன்…. நீங்க கேட்டீர்களா ?  எதற்கு ஜிஎஸ்டி முழுவதுமாக கட்ட வேண்டும் கேட்பீர்களா ? எதிர்த்து குரல் கொடுப்பீர்களா ?

மத்திய அரசுக்கு எதிர்த்து குரல் கொடுப்பீர்களா ? மாநில அரசு தியேட்டரை மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை 50% தான் உள்ளே விட வேண்டும் என்று சொல்லுது. இதற்க்கு  எதற்கு எல்பிடி டாக்ஸ் ? இந்தியாவில் எந்த மாநிலத்தில் லோக்கல் பாடி வரி இருக்கிறது. அதை எதிர்த்து போராட்டம் செய்வீர்களா ? இன்றைக்கு தேர்தல் முடிந்து இருக்கிறது.

மே 2ஆம் தேதி தான் ரிசல்ட் வரும். யார் கவர்மெண்ட்டோ ? எந்த கவர்மெண்ட் வந்தாலும் எங்களுடைய கோரிக்கையை நாங்கள் செல்வோம், நாங்கள் போராடுவோம். நாங்கள் எங்கள் உணர்வை சொல்வோம். யாரு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் செயல்பட முடியாதவர்களுக்கு ஏன்  ஒரு சங்கம். அது சங்கமா இல்லை வாயில் போட்டு மெல்லக்கூடிய ஸ்விங்கமா… எதற்கு நடத்துகிறீர்கள் ? என டி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |