நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் 7,500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப் படுவதாகவும் மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் அச்சத்தில் திண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் தினமும் 7,500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள், ‘நாங்கள் தினமும் 7,500 டன் ஆக்சிஜன் தயாரிக்கிறோம். மாநிலங்களுக்கு மருத்துவ தேவைக்காக தினமும் 6,600 டன் ஆக்ஸிஜன் வழங்கப்படுகின்றன. மருத்துவ பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், பிற தொழில்சாலைகளுக்கான ஆக்சிஜன் வினியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
கொரோனா விவகாரத்தில் மாநில அரசுகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா என்னும் கொடிய வைரஸை எதிர்கொள்ளும்போது சிலசமயங்களில் அச்சமும், குழப்பம் ஏற்படலாம். ஆனால் அப்போதுதான் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கியமாக உயிர்காக்கும் ஒன்றாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் மாநில அரசுகளும், மருத்துவமனைகளும் ஆக்சிஜனை விவேகம் உடன் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நாளுக்குநாள் இதன் தேவை அதிகரித்து வருகின்றது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.