Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கருப்பின சிறுமி சுட்டுக்கொலை…. காவல்துறை வெளியிட்ட வீடியோ…. நடந்தது என்ன….?

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். இதனால் அவரின் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கூறிய நிலையில் கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அதில் Makiyah Bryan(15) என்ற சிறுமி மற்றும் சிலர் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சண்டையை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

 

ஆனால் காவல்துறை அதிகாரி கூறியதை கேட்காமல் Makiyah Bryan மற்றொரு பெண்ணை கத்தியால் தாக்க முயன்றதால் காவல்துறை அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டதால் Makiyah Bryan சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த சிறுமியின் அத்தை கூறுகையில் தங்கள் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளவே அவர் கையில் கத்தி வைத்திருந்தார் என்றும் காவல்துறையினருக்கு Makiyah Bryan தான் தகவல் அளித்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |