பிரித்தானியாவின் இளவரசரான பிலிப் தனது 99 வயது வரை உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தற்கான பின்னணியில் ஒரு கனேடியர் இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கனடாவில் உள்ள Saskatoon பகுதியில் வசித்து வரும் William orban என்பவரால் உருவாக்கப்பட்ட, 5BX எனும் 11 நிமிட உடற்பயிற்சி திட்டம் உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் இளவரசர் பிலிப் அந்த திட்டத்திற்கு பெரிய ரசிகர் என்று William Orban-ன் மகன் Bill Orban கூறியுள்ளார். மேலும் இளவரசர் பிலிப் ஒருமுறை தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது சில சந்தேகங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டதாகவும் தனது அப்பா கூறியதாக Bill Orban தெரிவித்துள்ளார்.
அதன்பின் இந்த 11 நிமிட உடற்பயிற்சி திட்டம் வெளியானதிலிருந்து, இளவரசர் பிலிப் வாழ்வின் கடைசி பகுதி வரை உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாக Bill Orban கூறியுள்ளார். மேலும் இளவரசர் பிலிப் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அந்த உடற்பயிற்சிகளை செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இளவரசர் பிலிப் தினமும் வாக்கிங் மற்றும் ஜாக்கிங் செய்து வந்ததாகவும் Bill Orban குறிப்பிட்டுள்ளார்.