பிரான்ஸ் அரசு இந்தியாவிலிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் கடுமையான பயண விதிகளை விதித்திருக்கிறது.
பிரான்ஸ் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும் இந்திய பயணிகள் பிரான்ஸில் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனை பிரான்ஸின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் பிரான்ஸ் இணைத்துள்ளது. மேலும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்தியா செல்வதை தவிருங்கள் என்று அமெரிக்க அரசு எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.