18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வரும் 28ஆம் தேதி முன்பதிவு செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதை கோவிட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 13 கோடி பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.