ராஜா திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதே திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி கடந்த ஆண்டு இப்படம் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து ஓராண்டாக வெளியாகாமல் இருக்கும் ராதே திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது மீண்டும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகம் எடுத்து வருவதால் இப்படத்தின் ரிலீசை படக்குழு வித்தியாசமான முறையில் வெளியிட உள்ளது.
அதன்படி திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் பிரபல ஓடிடி தளத்திலும் ராதே திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தினை ஓடிடியில் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இப்படத்தின் வசூலில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.