Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போர்…! 24மணி நேர செயல்பாடு….. அதிரடியாக களம் இறங்கிய தமிழக காங்கிரஸ் …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தேர்தலுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். முன்னாள் பாரதப் பிரதமரும் உலகத்தினுடைய மிகச்சிறந்த பேரறிஞருமான மன்மோகன்சிங் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அகில இந்திய மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தேசத்தின் உடைய வளர்ச்சிக்காக அமைதியாக உழைத்தவர்.

பகட்டாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக நடந்து கொண்டவர். இன்றைக்கு தேசம் பல அங்குலம் வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் அதற்கு அவர் தான் மிக முக்கிய காரணம். அவருடைய பொருளாதார அறிவு விளிம்பு நிலை மக்களுக்கு, ஏழை மக்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய உதவிகரமாக இருந்தது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் இந்திய அரசியலுக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் இந்திய சமூகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் அவர் உதவிகரமாக இருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறது.

இன்றைக்கு சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவி மையம் 24 மணி நேரமும் பணியாற்றும். இதற்காக ஒரு மருத்துவக் குழுவை அறிவித்து இருக்கிறோம். அந்த மருத்துவ குழுவின் தலைவராக டாக்டர் எம்பி கலில் ரகுமான் அவர்கள் செயல்படுவார்கள். அவருக்கு உறுதுணையாக முகமது உபயதுல்லா பெய்,   முகமது நைமுதீன்,

டாக்டர் ஜெயந்தி, டாக்டர் சதீஷ் மேலும் பல மருத்துவர்கள் அந்த குழுவில் பணியாற்றுவார்கள். இந்த குழுவின் உடைய ஒருங்கிணைப்பு தலைவராக சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர் இவர்களை ஒருங்கிணைப்பார். அவருக்கு கீழும் உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள், அந்த அறிவிப்பு தனியாக வெளிவரும்.

மேலும் பேசிய அவர், எங்களுடைய குழு 24 மணி நேரமும் செயல்படும். அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுடைய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மாவட்டங்களில் செயல்படுவார்கள். பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி மையம் தொடர்பு எண் 9884466333என தமிழக காங்கிரஸ் சார்பில் கே.எஸ் அழகிரி அறிவித்தார்.

Categories

Tech |