சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக பிரபல முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திட்டமிட்டபடி வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.