ஜெர்மனியில் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்காத அலுவலகங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இனி அலுவலங்களில் வந்து பணிபுரிவோருக்கு கொரோனா பரிசோதனைகளை கிட்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கிட்களை ஊழியர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது அதனை பயன்படுத்தி பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பரிசோதனைகளை கிட்களை வழங்காத அலுவலகங்களுக்கு 30 ஆயிரம் யூரோக்கள் அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி செய்வதை அனுமதிக்காததாலும், அடிப்படை சுகாதார வசதிகளை செய்து தராமல் இருந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.