Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனி 94 ரூபாய் தான்”…. மந்தமான கோழிக்கறி விற்பனை…. ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு..!!

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி  ஒருங்கிணைப்பு குழு கூட்டதில் ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 94 க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் ஒரு கிலோ கோழிக்கறி 106 க்கு விற்பனை செய்து வந்த நிலையில் 12 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது ஒரு கிலோ கோழிக்கறி ரூபாய் 94 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கறிக்கோழி விற்பனை மந்தமாகி இருப்பதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |