நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு வழங்கியது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.