ராணிப்பேட்டையில் மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், அதனை பூட்டி விட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வழக்கம்போல் நிறுவனத்தை திறக்க ஊழியர் வந்தார். அப்போது நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஊழியர் தகவல் கொடுத்தார்.
இத்தகவலின் அடிப்படையில் நிறுவனத்திற்கு விரைந்து வந்த பாஸ்கர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பணம், டிவி கடிகாரம் போன்றவை மர்ம நபரால் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.