வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறி வைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறிவைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலரான 27 வயது யியோன்மி பார்க் எனும் பெண் தெரிவித்துள்ளார். சவுதி பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கி தூதரகத்தில் நேர்ந்த நிலைமை தனக்கும் ஏற்படலாம் என்ற பயத்தையும் அவர் வெளிபடுத்தியுள்ளார். மேலும் யியான்மியின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த போது கிம் ஜாங் நிர்வாகம் அவரை கைது செய்துள்ளனர். அப்போது யியான்மி வடகொரியாவில் இருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு கடும் போராட்டத்திற்கு பிறகு தப்பியுள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் வசித்து வரும் யியான்மி, கிம் ஜாங் குடும்பத்தினர் செய்து வரும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக வட கொரிய மக்களின் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்ட எனக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பலமுறை தான் கிம் ஜாங் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பல வருடங்களாக இந்த எச்சரிக்கை தொடர்வதாக குறிப்பிட்ட அவர் தனது உறவினர் அனைவரையும் கிம் ஜாங் நிர்வாகம் கண்டித்துள்ளது எனவும் தெரிவித்தார். இது பல தலைமுறைக்கும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் கொல்ல செய்யப்பட்டனரா அல்லது சிறையில் உள்ளனரா என்ற எந்த தகவலும் எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் கொடூரமாக பழி வாங்கப்பட்டதாக மட்டும் தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார்.