Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இல்லன்னு சொல்றாங்க… இன்று முதல் நடைபெறும் தீவிர பணி… தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய கோரிக்கை…!!

குமரியில் ஐந்தாயிரம் தடுப்பூசி டோஸ்ட் வந்துள்ளதால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் கோவிட் தடுப்பூசி டோஸ்ட் வந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக முதல் தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து களப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் இருப்பவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1 ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 140 மையங்களான ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 41 மினி கிளினிக்குகள்,  42 தனியார் மருத்துவமனைகள் போன்ற மையங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் குமரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி தட்டுப்பாடு இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பல மையங்களில் தடுப்பூசி கிடைக்காத காரணத்தால் மருத்துவ பணியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 6 லட்சம் தடுப்பூசி டோஸ் வந்துள்ளது.

இதனையடுத்து குமரி மாவட்டத்திற்கு 12 ஆயிரம் கோடி தடுப்பூசி வரும் நிலையில் தற்போது ஐந்தாயிரம் கோவிட் தடுப்பூசி நேற்றுமாலை வந்துள்ளது. எனவே கோவிட் தடுப்பூசியை ஒவ்வொரு மையங்களுக்கும் பிரித்து கொடுத்து இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையறிந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவமனைக்கு சென்றால் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் தடுப்பூசி மருந்து இல்லை என்று மக்களை அனுப்பி வைக்கும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்த்து அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |